ராதா ரவி சாரை பார்த்து பயந்துட்டே இருந்தேன்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா..
எதிர்நீச்சல் ஹரிபிரியா
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹரிபிரியா, தற்போது எதிர்நீச்சல் 2 தொடரில் பிஸியாக நடித்து வருகிறார்.
நந்தினி என்ற ரோலில் சிறப்பாக நடித்து வரும் ஹரிபிரியா, வருணன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், ராதா ரவி, கேப்ரியல்லா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் மூத்த நடிகர் ராதா ரவி பற்றி பேசியுள்ளார்.
ராதா ரவி
அதில், ராதா ரவி சாருடன் ஒரு சீன் நடித்த போது அவ்வளவு பயந்தேன். இயக்குநரிடம் பயமா இருக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டே இருந்தேன்.
நல்ல வேளை அவருடன் ஒரு டயலாக்கும் இல்லை, இல்லன்னா மயக்கம் போட்டு விழுந்திருப்பேன். ஏனென்றால் அவர் ஒரு பெரிய லெஜண்ட் நடிகருடன் முதன்முதலில் நடிக்கிறேன். நீங்கள் சிம்பிளாக இருந்தீர்கள் சார் நன்றி என்று ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.\
இதனைதொடர்ந்து பேசிய ராதா ரவி, அந்த குழந்தை (ஹரிபிரியா)சொல்லிச்சு, ராதா ரவி கூட நிக்கவே பயமா இருந்துச்சுன்னு. ஏம்மா அப்படி சொல்லி சொல்லி ஒதுக்கிடுறீங்க. நான் உன்ன தொட்டு பார்த்தேனா? தொடக்கூட இல்லை. நான் உன்ன என்ன சொச்சேன், பார்த்தேன், படமா பார்த்தேன்.
நீங்க இப்படி சொல்லி யாரும் என்ன நடிக்க கூப்பிட மாட்டாங்க, என் பொழப்பு போகுது. இனிமே அவர் நல்லா பேசுவாருன்னு சொல்லுங்க என்று ராதா ரவி காமெடியாக பேசியிருக்கிறார்.