போதும்டா சாமி..சேனல் போட்ட முட்டு!! திடீரென முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்

Tamil TV Serials Ethirneechal
By Edward Feb 01, 2026 08:45 AM GMT
Report

இயக்குநர் திருச்செல்வன் இயக்கத்தில் கடந்த 2022ல் இருந்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் சீரியல். ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் சிக்கிய 4 பெண்கள், தடைகளை மீறி வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையோடு தொடங்கிய இந்த சீரியல் சிறப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

போதும்டா சாமி..சேனல் போட்ட முட்டு!! திடீரென முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல் | Ethirneechal Serial Faces Backlash As Trp Drops

இதன் தொடர்ச்சியாக தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது ஆரம்பித்து மக்கள் மத்தியில் சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில், அவர்களை ஒவ்வொரு இடத்திலும் தோற்கடித்து, ஆண்களிடம் அடிமைப்படுத்துற மாதிரி கதை போகுது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. எதிர்நீச்சல் தொடர்கிறது' டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறதாம்.

இதன் விளைவாக, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் காலை 8.30 மணி மறு ஒளிபரப்பு இனி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதும்டா சாமி..சேனல் போட்ட முட்டு!! திடீரென முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல் | Ethirneechal Serial Faces Backlash As Trp Drops

பிப்ரவரி 2 முதல் மறு ஒளிபரப்பு கிடையாது என்பதால், "மக்களே காலையிலேயே இதைப் பார்த்து தலைவலி எடுத்துக்க வேண்டாம என்றும் பெண்கள் முன்னேற்றம் காட்டுறீங்களா? ஒரு கேரக்டரையாவது ஜெயிக்க விடுங்க, இந்த வீட்டுப் பெண்கள் மட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் முன்னேறவே முடியாதா?, ஒரு நாள் சந்தோஷமா முடிஞ்ச எபிசோடு வருமா? இப்படி தான் இப்போ என்ற் சன் டிவியே முடிவு பண்ணிட்ட மாதிரி தான் இருக்கு என்று பலரும் கருத்தக்களை தெரிவித்து வருகிறார்கள்.