ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, தரமான சம்பவம்.. எதிர்நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுத்த மாஸ் வில்லன்!
எதிர்நீச்சல்
சன் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது பல திருப்பங்கள் உள்ளது.
தான் நினைத்த அனைத்து விஷயமும் நடந்தாக வேண்டும், நான் தான் இங்கு கிங் என்ற எண்ணத்தில் இருக்கும் குணசேகரன் வீட்டுப் பெண்களை படாத பாடு படுத்திவிட்டார்.
இப்போது பெண்கள் அனைவரும் தைரியமாக குணசேகரனை எதிர்த்து போராடவும் ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது பெண்கள் போராடி தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து விட்டனர்.
அடுத்து குணசேகரன் மறைத்து வைத்த ரகசியம் ஒன்று வெடிக்கப்போகிறது என்ற லீட் சில வாரங்களுக்கு முன்பே இயக்குநர் தெரிவித்துவிட்டார்.
சக்தி கையில் சிக்கிய கடிதம் எழுதியது ஒரு பெண், அவர் யார் என்ன நடந்தது என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
தரமான சம்பவம்
இந்நிலையில், இப்போது வந்த தகவல் என்னவென்றால் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியல் புகழ் ஆதி, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தரமான செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இவர் கடிதத்தில் இருந்த பெண்ணின் மகனாக என்ட்ரி கொடுத்து வில்லத்தனத்தில் குணசேகரனுக்கு டப் கொடுப்பார் என கூறப்படுகிறது.