பாக்யராஜ் ஆன்மா சும்மாவிடாது..இப்போ விளம்பரமா? விளாசிய பிரபலம்..
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்
தமிழ் சினிமாவில் சங்கத் தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காமல், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வழக்கம். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலிலும் இப்படியான ஒரு விஷயம் நடந்து வருகிறது.

அதில் மறைந்த கே பாக்யராஜின் பெயரும் அதிகமால அடிப்பட்டு வருகிறதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 19 ஆம் தேதி நடக்கவுள்ளது.
வடபழனி, திரையிசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் பாக்யராஜும் போட்டியிடுவதாக முடிவு எடுத்திருந்தார். இதுகுறித்து பாக்யராஜ் இறப்பதற்கு முந்தைய நாளில் பல பிரபலங்களுக்கு போன் செய்து பேசியிருந்தார். அனைவரும் அவருடைய இறுதி அஞ்சலியில் கண்ணீருடன் பேசியிருந்தனர்.

அதுபோல் இந்த தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையில் நம்ம கே பாக்யராஜ் அணி களமிறங்கியுள்ளது. இதில் எதிரணியும் திரைக்கதை மன்னண் கே பாக்யராஜ் அணி என்ற பெயாரில் தேர்தலை சந்திப்பதால் சினிமா வட்டாரத்தில் கேள்வி எழுந்து வருகிறது.
கே பாக்யராஜ்
இதுகுறித்து பேசிய பிஸ்மி, கே பாக்யராஜ் உயிரோடு இருந்தபோது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு சதி செய்தவர்களும் தேர்தல் வெற்றிக்காக இப்போது பாக்யராஜ் பெயரை பயன்படுத்துவது என்பது கேவளத்தின் உச்சம், பாக்யராஜ் ஆன்மா இவர்களை மன்னிக்காது என்று பதிவிட்டுள்ளார் பிஸ்மி.