எல்லாமே ஒரிஜினல்தான்..பிளாஸ்டிக் சர்ஜரி செய்யல!! உண்மையை உடைத்த பிரபல நடிகை
Gossip Today
Bollywood
Indian Actress
Actress
By Jai
அவினீத் கெளர்
பாலிவுட்டின் 24 வயது இளம் நடிகை அவினீத் கெளர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. அதை மறுத்து அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் வினீத் கெளர்.

தான் எந்தவித பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை. நான் இந்த கருத்துக்களை பார்ப்பதில்லை, உங்கள் குழந்தை பருவப் புகைப்படத்தையும் இப்போதைய புகைப்படங்களையும் பாருங்கள். நீங்கள் அனைவரும் வேறுபடுவீர்கள் என்று தெரியும்.
அனைவரும் வளர்கிறார்கள், முக அம்சங்கள் சற்று மாறும். மக்கள் பெரிய மாற்றமாக கருதுவது உண்மையில் ஒரு இயற்கையான வளர்ச்சிப் போக்குதான்.

வயதுக்கு ஏற்றவாறு முக அம்சங்கள் மாற்வது இயல்பு, இது முற்றிலும் சகஜமானது. நான் கத்தியின் கீழ் செல்லவில்லை. என் மூக்கும் கண்களும் அப்படியே இருக்கிறது. என்னிடமுள்ள அனைத்தும் இயல்பானவை, என் அம்மாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.