இதெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமானு தெரியலையே, விஜய் ரசிகர்கள் மனநிலை

Vijay TVK
By Tony Apr 30, 2026 01:30 PM GMT
Report

விஜய்

விஜய் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. ஆனால், அவர் அதையெல்லாம் விட்டு தற்போது முழுகவனமும் அரசியல் தான் என்று சென்றுவிட்டார்.

ஒரு வழியாக அரசியலிலும் நின்று தேர்தல் முடிவுக்காக காத்திருகிறார், இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் எக்ஸிட் போல் வெளியிட்டது.

இதில் 70% பேர் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றனர்.

தவெக

ஆனால், ஆக்ஸ் இந்தியா என்ற ஒரு நிறுவனம் மட்டும் தவெக தான் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும், 120 சீட் ஜெயிப்பார்கள், எதிர்கட்சியாக திமுக வரும் என கூறியுள்ளது.

இதெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமானு தெரியலையே, விஜய் ரசிகர்கள் மனநிலை | Exit Poll Tvk Result

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதித்து வருகின்றனர், ரிசல்ட் வரும் வரை இதை வைத்து கொண்டாடலாம் என கொண்டாடி வருகின்றனர்.

உண்மை மே 4 தெரிய தானே போகிறது என திமுக தொண்டர்களும் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.