அடேங்கப்பா! பல கோடியில் சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்.. விலை இவ்வளவா?

Rajinikanth Actors Fahadh Faasil
By Bhavya Sep 06, 2025 03:45 PM GMT
Report

பகத் பாசில்

மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில்.

தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோவாக வலம் வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, பகத் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன், ரஜினியுடன் இணைந்து வேட்டையன் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

கார் பிரியரான பகத்பாசில் ஏற்கனவே லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏ.எம்.ஜி, ரேன்ஞ்ரோவர் ஆட்டோ பயோகிராப்பி, லேண்ட்ரோவர் டிபண்டர், போர்ச்சே 911, டொயோட்டா வெல்பைர், மினிகண்ட்ரிமேன், வோக்ஸ் வேகன் போன்ற ஆடம்பர வசதிகளுடன் கூடிய கார்கள் உள்ளன.

அடேங்கப்பா! பல கோடியில் சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்.. விலை இவ்வளவா? | Fahadh Faasil New Car Details

விலை இவ்வளவா? 

தற்போது, பகத்பாசில் புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1 கோடியோ ரூ.2 கோடியோ கிடையாது. இந்த காரின் விலை மட்டும் ரூ.13.75 ஆகும். இது போன்ற காரை முகேஷ் அம்பானி, நடிகர் விக்ரம் ஆகியோர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

அடேங்கப்பா! பல கோடியில் சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்.. விலை இவ்வளவா? | Fahadh Faasil New Car Details