விஜய், விக்ரமால் நடுத்தெருக்கு வந்த தயாரிப்பாளர்! எத்தனை கோடி..

vijay producer vikram imovie oscar ravi
By Edward Dec 04, 2021 04:43 AM GMT
Report

சினிமாவில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நடிகர்களின் மார்க்கெட்டை நம்பியும் இயக்குநரின் கதையை நம்பியும் தான் படத்தினை தயாரிக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக விளங்கிய ஒரு தயாரிப்பாளர் சொத்துக்களை எல்லாம் விற்று கடனை அடைத்து நடுத்தெருவிற்கு வந்துள்ளாராம்.

பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராக இருந்தவர் ஆஸ்கார் ரவிசந்திரன். ரமணா, அந்நியன், ரெண்டு, தசாவதாரம், வாரணம் ஆயிரம், ஆனந்தத்தாண்டவம், மரியான், ஐ போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார்.

இதில் ஐ படம் பெரிய அளவில் எதிர்பார்த்து பின் தோல்வியை கண்டது. விமர்சன ரீதியாகவும் பண ரீதியாகவும் மிகப்பெரிய அடியை கொடுத்தது தயாரிப்பாளருக்கு. இதையடுத்து விஜய்யின் வேலாயுதம் படமும் தோல்வியை கொடுத்தது.

இதனால் 150 கோடி சொத்துக்களை தற்போது ஏலத்துக்கு விட்டுள்ளார். பின் அந்நியன் 2 வை தயாரிக்கவும் ஜாக்கிசானை வைத்து எடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.