அஜித் மனைவி பெயரில் நடந்த பெரிய மோசடி! அநியாயம் பண்றீங்க டா

twitter Ajith Shalini Fake id
By Parthiban.A Feb 02, 2022 06:17 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். அவருக்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அஜித்தின் மனைவி ஷாலினியும் பிரபல நடிகை தான். அஜித் - ஷாலினி மற்றும் குடும்பம் பற்றி ஒரு சின்ன விஷயம் வெளியானால் கூட அது எந்த அளவுக்கு அது வைரலாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது ஷாலினி அஜித் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அது அதிகம் வைரலாகி பல ஆயிரம் followers அந்த கணக்கிற்கு வந்திருக்கிறது. ஆனால் அது ஷாலினியின் கணக்கு இல்லை போலியானது என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்த்ரா ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

இதில் ஹலைட் என்னவென்றால் நடிகை யாஷிகா ஆனந்த் ஷாலினியை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அது போலி கணக்கு என்பதாலேயே அவர் இப்படி பதிவிட்டு உள்ளார்.

போலி கணக்கு தொடங்கி என்னடா இப்படி அநியாயம் பண்றீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.