இந்த ஆட்டத்தையும் ஆட தயாராகிறாரா நடிகை சமந்தா! விவாகரத்துக்கு பின் எடுக்கபோகும் அதிரடி

Samantha Indian Actress
By Edward May 11, 2022 07:07 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரிமேக்கான Ye Maaya Chesave படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதையடுத்து இரு மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். கடந்த 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் தாராளம் காட்டி நடித்தும் சர்ச்சை காட்சிகளில் நடித்து பிரச்சனையை தேடிக்கொண்டார்.

சமீபத்தில் தி பேமிலி மேன்2 படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து கணவர் குடும்பத்தை முகம் சுளிக்க வைத்தார். இதனால் கணவருக்கு சமந்தாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் சுதந்திர பறவையாக மாறி க்ளாமர் ரோல், போட்டோஷூட் என எல்லைமீறி நடந்து வருகிறார். இந்நிலையில் தி பேமிலி மேன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த வருட இறுதியில் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இரண்டாம் பாகங்களை விட இந்த பாகம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக யார் நடித்திருக்கிறார்கள் என்பதை சீக்ரெட்டாக வைத்துள்ளாராம் இயக்குனர். இப்படத்தில் டிரைலர் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறதாம்.

இப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறாரா இல்லை வேறொரு நடிகையை போட்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் சமந்தா இப்படத்தினை கண்டிப்பாக தேர்வு செய்திருப்பார் என்று தான் பலர் கூறி வருகிறார்கள். அப்படி நடித்தால் ஓடிடியில் புதிய அத்யாயத்தை இப்படம் பெரும் என்றும் கூறப்படுகிறது.