அக்கா - தங்கை என இருவருடனும் ரொமான்ஸ் செய்த டாப் நடிகர்!! இவர் தான்..
சினிமாத்துறையில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் நடிகர்களாக மாறுவது என்பது சகஜமான ஒன்றாக பார்க்கப்படும். அதிலும் பாலிவுட் சினிமாவில் வெளிப்படையாகவே அது நடந்து வருகிறது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அம்மா, அக்கா, தங்கை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காலங்காலமாக சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் தான் பிரபல நடிகர் ஒருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தங்கையுடன் நடித்து வருகிறார்.
அக்ஷய் குமார்
அவர் வேறுயாரும் இல்லை, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார் தான். இவர் தமிழில் வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொடுத்தார்.
பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வரும் அக்ஷய், அக்கா, தங்கைகளான கீர்த்தி சனோன் மற்றும் நுபுர் சனோனுடன் இணைந்து அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
ஹவுஸ்ஃபுல் 4 மற்றும் பச்சான் பாண்டே படத்தில் நடிகை கீர்த்தி சனோனுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் பிலால் என்ற படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை நிபுர் சனோன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.