தீபாவளி பண்டிகைக்கு எந்தெந்த சேனலில் என்ன படங்கள் தெரியுமா.. இதோ..
தீபாவளி பண்டிகை
மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி டியூட், டீசல், பைசன், கார்மெனி செல்வம், கம்பி கட்ன கதை போன்ற படன்கள் திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது. அதேபோல் தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் என்ன என்ன படங்கள் ஒளிப்பரப்பாகவுள்ளது என்ற லிஸ்ட்டை பார்ப்போம்..
சன் டிவி
அக்டோபர் 19 ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு கண்ணப்பா படம் ஒளிப்பரப்பாகவுள்ளது. தீபாவளி 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு ராம்போ படமும் மாலை 6 மணிக்கு ரஜினிகாந்தின் கூலி படமும் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு தனுஷின் குபேரா படமும், மதியம் 3.30 மணிக்கு பறந்து போ படமும், மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படமும் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளிக்கு சிறப்பு திரைப்படமாக விஜய் சேதுபதியின் Ace படம் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.
கலைஞர் டிவி
வெப் தொடராக வெளிவந்த சுழல் வெப் தொடர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18, 19, 20 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.