விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி!! வேதனையின் உச்சிக்கே சென்ற பிரபல நடிகர்!! ஆனா அஜித் வேறலெவல்
உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பற்றி பல நட்சத்திரங்கள் பெருமையாக பேசுவதோடு அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட விஜய், நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது என்று கூறியது மன வேதனை அளித்ததாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சம்பத் ராம். கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பலரின் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் படத்தில் சந்தனமுடன் வரும் குடுபத்தினராகவும் நடித்திருப்பார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம் போன்ற படங்கள் உட்பட, விஜய்யின் பல படங்களில் நடித்திருக்கிறேன். விஜய்யை சந்தித்த போது நீங்கள் யார் எனக்கு உங்களை தெரியாது நியாபகம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஒன்றிரண்டு படம் என்றால் பரவாயில்லை பல படங்களில் நடித்த என்னை இப்படி கேள்வி கேட்டது அதிர்ச்சியடைந்ததாகவும் இந்தளவிற்கு தன்னை மறந்துவிட்டாரா என்று தனக்குத்தானே கேள்விகளை கேட்டுக்கொண்டுள்ளார் சம்பத் ராம்.
ஆனால் அஜித் அவரை மறக்காமல் அவருக்காக உதவிகளையும் செய்து வருகிறாராம். இப்போது வரை தன்னை பார்த்து அஜித் நலம் விசாரிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் சம்பத் ராம்.