கமலை ஒரு தலையாக காதலித்து இறந்துபோன பிரபல நடிகை.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?
கமல் ஹாசன்
நடிப்பு, நடனம், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பல பன்முகங்களை கொண்டவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில், கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1973-ம் ஆண்டு 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற திரைப்படம் வெளியானது. இதில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீவித்யா நடித்திருந்தார்.
இதைதொடர்ந்து கமல் - ஸ்ரீவித்யா கூட்டணியில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்தனர் என கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீவித்யா கமல் ஹாசனை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாராம்.
ஆனால் அந்த நேரத்தில் கமல் ஹாசன் வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடைசி ஆசை
பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீவித்யா கடைசி காலகட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.
மரண படுக்கையில் இருந்த இவர், 'கமல் ஹாசனை மட்டும், தான் பார்க்க விரும்புகிறேன்' என்று கூறினாராம். அவரின் ஆசைக்கு இணங்க கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று பார்த்து அறுதல் கூறியிருந்தாராம்.
ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன்பு அவரின் சொத்து பத்திரங்களை ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைத்து விட்டாராம்.