சமந்தாவை கடவுளாக வழிபடும் ரசிகர்.. செய்த வெறித்தனமான செயல்
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் பங்காராம் திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.
சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருப்பினும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் என்பது குறையாத ஒன்று.
செய்த செயல்
இந்நிலையில், ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் தன் வீட்டின் அருகேயே சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டியுள்ளார்.
இந்த கோவில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சிலர் இந்த செயலை பாராட்டினாலும், சிலர் இது போன்ற பத்தியக்கார ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்களா என்று விமர்சித்தும் வருகிறார்கள்.