விஜய்யின் கோட் படத்தில் அஜித் நடித்தால் எப்படி இருக்கும்..சும்மா அள்ளுமே.. வைரலாகும் போஸ்டர்..
GOAT
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
அஜித் லுக்கில் கோட்
கோட் படத்தின் டிரைலரை பார்த்து அஜித் நன்றாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கூறியதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோட் படத்தில் அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என்று கோட் பட விஜய் போஸ்டரை அப்படியே அஜித் லுக்கில் ரசிகர்கள் எடிட் செய்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

