நடிகை பூனம் பாண்டேவிடம் அத்துமீறிய ரசிகர்.. பொது இடத்தில் இப்படியா

Indian Actress Actress Poonam Pandey
By Kathick Feb 22, 2025 02:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மிகவும் குறைவான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கிளாமர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.

இவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடையடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். இந்த நிலையில், தற்போது பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ ஒன்று படுவைரலாகி வருகிறது.

நடிகை பூனம் பாண்டேவிடம் அத்துமீறிய ரசிகர்.. பொது இடத்தில் இப்படியா | Fan Misbehave With Actress Poonam Pandey

இதில் நடிகை பூனம் பாண்டேவிடம் செல்பி எடுக்க வந்த நபர் ஒருவர் அத்துமீறி இருக்கிறார். பூனம் பாண்டே அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில், அந்த நபர் முத்தம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..