3 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்!! வந்திறங்கிய கிஸ்க்-னு ஆட்டம் போட்ட நடிகை..
ஸ்ரீலீலா
சினிமாவில் ஒருசிலர் ஓரிரு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தால் மிகப்பெரியளவில் ஃபேமஸ் ஆகிவிடுவார்கள். அப்படி ஒரே ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டு இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரீலீலா.
தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீலீலா, அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் கிஸ்க் என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். அதன்பின் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
3 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஸ்ரீலீலா ஒரு புதிய ரேஞ்ச் ரோவர் காரில் விமான நிலையத்தில் வந்திறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரின் தோற்றத்தை வைத்து பார்த்தால் ரேஞ்ச் ரோவர் எச் எஸ் இ லாங்-வீல்பேஸ் கார் என்று கூறப்படுகிறது.
டீசல் என்ஜினுடன் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே விலை குறைவான வேரியண்ட் உடைய காரைத்தான் ஸ்ரீலீலா வங்கியுள்ளார். இதன் விலை வெறும் 2.40 கோடி - 3 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகிறது.