வேண்டவே வேண்டாம்ன்னு சொல்ல முடியாத உணவு இதான்!! எம் எஸ் தோனி ஓப்பன் டாக்..
எம் எஸ் தோனி
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி, பெரும்பாலும் பேட்டிகளில் கலந்து கொண்டு வெளிப்படையாக பேசுவது கிடையாது. ஆனால் சமீபகாலமாக தன்னுடைய தனிப்பட்ட மற்றும் கிரிக்கெட் சம்பந்தமான விஷயங்களை வெளிப்படைத்தன்மையுடன் பேசி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்பது என் கனவு. ஒவ்வொருவருக்கும் நாட்டிற்காக விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.
நாங்கள் பெரிய மெடையில் இருந்தபோதோ அல்லது சுற்றுப்பயணம் செய்தபோதோ, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது, எனவே எனக்கு நாடுதான் எப்போதும் முதலில் முக்கியம் என்று கூறியிருந்தார்.
பட்டர் சிக்கன்
தற்போது நடிகை மந்த்ரா பேடி எடுத்த பேட்டியில், எத்தனை முரை கொடுத்தாலும் உங்களால் வேண்டாம் என்று சொல்ல முடியாத ஒரு உணவு எது? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு எம் எஸ் தோனி, பட்டர் சிக்கன் தான். அதற்கு காரணம், 2004ல் நான் அறிமுகமாகி 2005ல் இருந்து இந்தியாவிற்கு விளையாட ஆரம்பித்தேன்.
அப்போது ஓட்டலில் தங்கியபோது, ஒரு நன், ஒரு மில்க்ஷேக் மற்றும் பட்டர் சிக்கனை மதியமும் டின்னருக்கும் ஆர்டர் செய்தேன். அடுத்த நாள் நான் கால் செய்து உணவு ஆர்டர் செய்யும் போது, நேற்றுக்கொடுத்ததை கொடுங்கள் என்று வாங்கி சாப்பிட்டதாக தோனி தெரிவித்துள்ளார்.
அதற்கு மந்த்ரா பேடி, பட்டர் பன்னீர் சாப்பிடலாமே என்று கூறிய அடுத்த செகண்ட்டில், அதனை அதனுடன் ஒப்பிடமுடியாது என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
சிக்கனுக்கு பதிலா பன்னீர் சாப்பிடலாமேனு சொல்லி முடிக்கறதுக்குள்ளயே, “No No Both are not same” னு முடிச்சு விட்டாப்ல தோனி 🤣 pic.twitter.com/BPuwcjNEKb
— தோழர் ஆதி (@RjAadhi2point0) February 21, 2025