அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! இந்த போட்டோ தான் காரணம்

Ajith Kumar Aishwarya Rajinikanth
By Parthiban.A Jul 26, 2022 02:10 AM GMT
Report

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஹிந்தியில் ஒரு படம் தற்போது இயக்கி வருகிறார்.

மேலும் அவர் உடலை பிட் ஆக வைக்க சைக்கிளிங், ஜிம் என நேரத்தை செலவிட்டு வருகிறார். இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து அவர் ஒர்கவுட் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆக, அஜித் ரசிகர்கள் அவரை கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

தற்போது அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் அப்டேட் கொடுங்க என்று தான் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.