நடிகை மாளவிகாவின் உடலை படுமோசமாக வர்ணித்த ரசிகர்! பதிலடி கொடுத்த மாஸ்டர் நாயகி..
பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
படத்தில் கமிட்டாகியது முதல் க்ளாமரில் தாராளம் காட்டி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். படம் வெளியாகி மாளவிகாவிற்கு போதிய வரவேற்பு கிடைக்காமலே போனது. அதேபோல் தனுஷின் மாறன் படமும் ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மாளவிகா திடீரென ரசிகர்களிடன் நேரலையில் பேச டிவிட்டர் பக்கத்தில் லைவ் சேட்டில் ஈடுபட்டார். அப்போது எல்லைமீறிய கேள்விகள் ஒருசில ரசிகர்களால் கேட்கப்பட்டு தக்கபதிலடியும் கொடுத்துள்ளார் மாளவிகா.
அதில் ஒரு ரசிகர் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று கூச்சமில்லாத கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா, சமுகவலைத்தளத்தில் இருக்கும் ஆண்களின் தைரியம் எவ்வளவு பெரியது இல்லையா? நான் அதை பார்த்து திகைத்து இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதுபோல மாளவிகா மோகனன் பல ரசிகர்களின் முரண்பாடான கேள்விகளுக்கு போல்ட்டாக பதிலளித்துள்ளார்.
How big the audacity of certain men on social media gets, right? Even I’m flabbergasted
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2022