சீரியலில் இருந்து வெளியேறிய வெண்பா.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
Farina Azad
Abhi Tailor
By Parthiban.A
பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஃபரீனா ஆசாத். அந்த சீரியலில் அவரது வில்லத்தனமான நடிப்பு தான் தொடர் பரபரப்பாக இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. அதனால் பாரதி கண்ணம்மா தொடரில் சில வாரங்கள் மட்டும் அவரது கதாபாத்திரம் காட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தான் அவர் வழக்கம் போல நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் கலர்ஸ் தமிழ் தொடரான அபி டெயிலர் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஃபரீனா அபி டெயிலர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார் என செய்தி வெளியாகி இருக்கிறது.
அவருக்கு பதில் ராஜபார்வை சீரியல் புகழ் கீர்த்தி தான் இனி அந்த சீரியலில் நடிக்க போகிறாராம்.