வடசென்னை திரைப்படம் அவ்ளோதான்.. வெற்றிமாறன் தனுஷ் இடையே மோதல்!!
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான வடச்சென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
முதல் பாகம் வெளியான சமயத்தில் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே தனுஷ் வெற்றிமாறன் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். தற்போது இருவரும் எதிரும், புதிருமாக மாறிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் வெற்றிமாறன் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.
அதன்படி, வடசென்னை 2 படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்திகேயன் என்பவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, அன்பு கதாபாத்திரமும், அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரமும் படத்தில் இருக்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.