விஜய் அந்த நடிகையுடன் திருமணம்!! சங்கீதா விவாகரத்து உண்மையை உடைத்த பத்திரிகையாளர்..
இந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விஜய் குறித்து பல செய்திகள் உலா வருகிறது. அது என்னவென்றால் விஜய் அவரின் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய போகிறார். இதற்கு காரணம் விஜய்யும், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருப்பது தான் என்றும் பல வதந்திகள் வெளியானது.
விஜய்க்கு மிரட்டல்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ," விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடினார்".
"ஆனால் சில மீடியாக்கள் தான் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்ததாக கூறி வருகின்றனர். இது முற்றிலும் பொய். மேலும் கீர்த்தி சுரேஷ், சங்கீதா இடையே எந்த பிரச்சனையும் இல்லை".
"சில காரணங்களால் விஜய் மீடியாவை தவிர்த்து வருகிறார். இந்த வெறுப்பில் தான் மீடியாக்கள் விஜய் மீது மிரட்டல் விடுகிறார்கள்" என்று பயில்வான் கூறியுள்ளார்.