உதவி செய்ய நினைத்து ஏமாந்து போன ஜிவி பிரகாஷ்!! ஷாக் கொடுத்த மர்மநபர்..
ஜிவி பிரகாஷ் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார், சில உதவிகளை செய்து வருகிறார். அப்படி எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷை குறிவைத்து மாம் லிட்டில் கிங் என்ற அக்கவுண்டில் இருந்து, என் அம்மா தவறிவிட்டார்கள்.

எனக்கு ஒரு தங்கச்சி மட்டும்தான், அப்பா இல்லை, என் அம்மா தற்போது இறந்துவிட்டார், அவரை அடக்கம் செய்வதற்குகூட பணம் இல்லை என்றும் எனக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
அதோடு தன்னுடைய அம்மா இவர்தான் என்றும் அவரது புகைப்படத்தை பதிவிட்டு மெசேஜ் செய்துள்ளார். இதனால் உருகிப்போன ஜிவி பிரகாஷ், அந்த பதிவை அனுப்பியவரின் நம்பரை வாங்கி அவரது கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் தான் செய்த உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார் ஜிவி. அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பிவைத்தனர்.

ஆனால், அதன்பின் நிகழ்ந்த சம்பவங்கள் தான் இதில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய அம்மா இறந்துவிட்டதாக சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ, 3 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே உலாவி வருகிறதாம்.
ஏற்கனவே யூடியூப்பில் உலாவி வருவதாகவும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டும் வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்கள் இருப்பதால் தான் உதவும் குணம் படைத்தவர்கள்கூட உதவி செய்வதற்கு பின்வாங்கும் நிலை ஏற்படுகிறது என்றும் ஜிவி பிரகாஷை பாராட்டி ஆதரவளித்தும் வருகிறார்கள்.