பசிக்கு பாலியல் தொழில்..பாரில் நடனம்!! இன்று பிரபல இயக்குநரான பெண்..
பல தடைகளை உடைத்து முன்னேற்பவர்களே தற்போதைய சாதனையாளர்களாக பார்க்கப்படுவார்கள். அப்படி ஒரு காலத்தில் பசிக்கொடுமையில் இருந்து தப்பிக்க பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார் அந்த பெண்.
வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொண்டு, பல நெருக்கடிகளுக்குப்பின் தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கத்தை நோக்கி நடைபோட்டு இன்று இந்திய சினிமாவில் புகழப்படும் திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார் அந்த பெண்.

எழுத்தாளர் ஷகுஃப்தா ரஃபீக்
அவர்தான், பாலிவுட்டில் தனது அழுத்தமான எழுத்துக்களால் தடம் பதித்த திரைக்கதை எழுத்தாளர் ஷகுஃப்தா ரஃபீக். குழந்தையிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் என்பதால் தாய் தந்தை யார் என்றே தெரியாமல் போயுள்ளது. இவரை தத்தெடுத்தவர் தான் பிரபல நடிகையான சயீதா கானின் தாயார்.
தொடக்கத்தில் ஷகுஃப்தாவின் சகோதரி சயீதாவின் வருமானத்தில் குடும்பம் வாழ்ந்தது. அவரது திருமணத்திற்கு பின் குடும்பத்தின் வருமானம் குறைந்தது. தந்தையின் மரணத்திற்குப்பின், ஷகுஃப்தா ரஃபீக் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.

பார்களில் டான்சராக
நிதி நெருக்கடி காரணமாக ஷகுஃப்தா 7ஆம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, 11 வயதில் பார்களில் டான்சராக நடனமாடி வந்தார். 17 வயதில் பணக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். ஆனால் பிரச்சனைகளால் அவரைவிட்டு பிரிந்து தனியே வாழ்ந்தார். அப்போது நிதி நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அவரே பேட்டியொன்றில் தெரிவித்தார்.

மகேஷ் பட்
இப்படியான சூழலில் தான் தயாரிப்பாளரும் நடிகையுமான ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டுடன் அறிமுகம் கிடைத்தது. இதன்மூலம் ஷகுஃப்தாவின் வாழ்க்கை மாறியது. அவரது திறமையை உணர்ந்த மகேஷ் பட், கல்யுக் படத்தில் சில காட்சிகளை எழுத அவருக்கு வாய்ப்பளித்தார்.
அவரின் எழுத்தில் ஈர்க்கப்பட்ட மகேஷ் பட், அவரை விஷேஷ் பிலிம்ஸுக்கு முழுநேர எழுத்தாளரகா நியமித்தார். ஒரு கதைசொல்லியாக மாற அவருக்கு கல்வி அல்லது பயிற்சி தேவையில்லை என்று மகேஷ் பட் பாராட்டினார்.
11 வயதில் பாரில் நடன கலைஞராக மது அருந்துபவர்கள் முன் நடனமாடத்தொடங்கிய ஷகுஃப்தா ரஃபீக், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, பாலிவுட் சூப்பர் ஹிட் படங்களான அவர்பன், ஆஷிகி 2, ராஷ், மர்டர் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் மற்றும் கதைகளை எழுதி 2019ல் இயக்குநராகவும் மாறி பிரம்மிக்க வைத்தார்.