இது என்னுடைய மகன் இல்லை.. மனைவி மீது சந்தேகப்பட்ட ரஜினி பட வில்லன் நடிகர்
Nawazuddin Siddiqui
By Dhiviyarajan
பிரபல நடிகர்
இந்திய திரைத்துறையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சர்ச்சை
தன் நடிப்பாற்றலால் பல ரசிகர்கள் வைத்திருக்கும் நவாசுதீன் சித்திக், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அது என்னவென்றால் இவரின் மனைவி ஆலியா சித்திக்கும் நவாசுதீனுக்கும் பிறந்த மகனை அவர் ஏற்க மறுப்பதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. அதனால் தன்னுடைய மகனை மரபணு சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு அவரின் மனைவி ஆலியா, 'இந்த பிரச்சனை முடிந்தவுடன் நான் நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்ய போகிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.
