விஷால் உதயநிதி இடையே வெடித்த மோதல்!.. காரணம் என்ன தெரியுமா?
2005 -ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து சண்டக்கோழி இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான நிலையில், எதிர்பார்த்தது போல் அமையாமல் படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தகன் விஷால் உதயநிதி இடையே நடந்த மோதல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அப்போது விஷால், லிங்குசாமிக்கு இவ்வளவு சம்பளம் என்று முடிவு செய்துள்ளனர்.
அப்போது விஷால், " லிங்குசாமிக்கு சம்பளம் கம்மியா கொடுங்க இதெல்லாம் ரொம்ப அதிகம்" என்று உதயநிதியிடம் கூறியுள்ளார். இதற்கு உதயநிதி, உனக்கு வேண்டும் என்றால் சம்பளம் அதிகமாக வாங்கு ஆனால் அதற்காக அவரது சம்பளத்தை குறைக்க சொல்லாதே என கூறி இருக்கிறார்.
இதன் பின்னர் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் தான் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமானது என்று அந்தகன் கூறியுள்ளார்.