நடிகையுடன் அப்படியொரு நெருக்கம்? திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் சண்டை
நடிகை நயன்தாரா 7 வருடங்களாக உருகிஉருகி காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் நடைபெற்ற திருமணம் கடும் பாதுகாப்பாக சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணமாகிய நாளில் இருந்து இருவரை பற்றிய பல செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதில் முக்கியமானதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் திருமணத்தின் வீடியோ ஸ்டீமிங்-ல் இருந்து விலகியதாக கூறப்பட்டது தான். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியது. இதனால் நயன் தாரா 25 கோடிக்கு விக்னேஷ் சிவனால் பிரச்சனை ஏற்பட்டதாக கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கவுள்ள நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 படத்தின் கதையில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா தான் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக லைக்கா நிறுவனம் 10 கோடி சம்பளம் வழங்கவிருந்ததாகவும் செய்திகள் பரவியது.

இந்நிலையில் அப்படத்தில் நயன் தாராவை விட்டுவிட்டு நடிகை சமந்தாவின் பெயரை சிபாரிசு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் சமந்தாவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருந்ததால் அப்பவே பிரச்சனை ஏற்பட்டதாம். அதனால் கோபத்தில் இருவருக்கும் சண்டை வந்ததாகவும் கூறப்பட்டது.
தற்போது ஏகே 62 படத்தின் சிபாரிசு காரணமும் வெடித்துள்ளதால் சில சலசலப்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ளதாம். இதனால் தான் சில நாட்களாக விக்னேஷ் சிவன் நயனுடன் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிடாமல் வருகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.