விஜய்யை டார்ச்சர் செய்து வற்புறுத்தி காரில் ஏற்றினார்களா? என்ன நடந்தது.. கே ராஜன் கூறிய உண்மை..

Vijay Master Movie
By Edward Jul 28, 2022 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு என்ற படத்தில் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. விஜய் படம் என்றாலே எதாவது சர்ச்சையாகி போராட்டத்தில் சென்று தான் முடியும். அப்படி சில ஆண்டுகளுக்கு முன் வருமானத்துறையினரால் பல முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்படி மாஸ்டர் படத்தின் போது படப்பிடிப்பு சமயத்தில் வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டு விஜய்யை கூட்டிச்சென்றனர். இதுகுறித்து அப்போதைய சமயத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய்யை டார்ச்சர் செய்து வற்புறுத்தி காரில் ஏற்றினார்களா? என்ன நடந்தது.. கே ராஜன் கூறிய உண்மை.. | Vijay Id Raid In Shooting Spot K Rajan React

அதில் விஜய் அவரது காரில் ஏறாமல் என் காரில் வருவதாக கூறியும், அவர்கள் வந்த காரில் ஏற்றினர். அப்படி என்ன தான் அந்த காரில் நடந்தது என்று நெறியாளர் ராஜனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னைப்பொருத்தவரை, ஒரு பெட்டிஷன் வந்தோ, வரி கட்டாமலோ சோதனை நடத்தலாம்.

ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது தயாரிப்பாளரை பற்றி கொஞ்சம் யோசித்து ரைட் நடத்தலாம். மூன்று மணி நேரம் பொறுத்து கூட்டிச்சென்று இருக்கலாம்.

விஜய்யை டார்ச்சர் செய்து வற்புறுத்தி காரில் ஏற்றினார்களா? என்ன நடந்தது.. கே ராஜன் கூறிய உண்மை.. | Vijay Id Raid In Shooting Spot K Rajan React

தயாரிப்பாளருக்கு இதனால் நஷ்டம் இல்லையா. அவர் காரில் வரவிடாமல் டார்ச்சர் செய்திருக்கலாம், இல்லை எது வேணாலும் பண்ணி இருக்கலாம் என்று கூறியுள்ளார் கே ராஜன்.