உயிருக்கு ஆபாத்தான சூழ்நிலை!! விவாகரத்தான 43 வயதான நடிகையிடம் அத்துமீறும் இயக்குனர்!

Manju Warrier
1 மாதம் முன்
Edward

Edward

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். 1995ல் சாக்ஷியம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். நல்ல வரவேற்பு பெற்று வந்த நடிகை மஞ்சு வாரியர் 1998ல் நடிகர் திலீப்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 7 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் சில கருத்து வேறுபாடு காரணமாக 2015ல் திலீப்-ஐ விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய இடத்தினை மீண்டும் பிடித்தார்.

சமீபத்தில் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றார். விவாகரத்துக்கு பின் தனிமையில் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கயட்டம் என்ற படத்தில் சமீபத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். படம் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

அப்படத்தில் நடித்த போது இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்னை காதலிப்பதாக கூறி தொடர்ந்து கால் செய்தும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் நடிகைக்கு ஆபத்து கடத்தப்பட்டார் என்ற செய்தியை இயக்குனர் சனல்குமார் தகவல்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் மஞ்சு வாரியருக்கு என்ன ஆனது என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் மஞ்சு வாரியர் போலிஸ் நிலையத்திற்கு சென்று மஞ்சு வாரியர் மீது புகார் அளித்துள்ளார். தான் இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கிய கயட்டம் படத்தின் போது என்னை காதலிப்பதாக கூறியிருந்தார்.

என்னை பற்றி அவர் அவதூறு கூறிய செய்திகளை கூட நான் கண்டுக்கொள்ளவில்லை ஆனால், நான் காதலை மறுத்ததால் தொடர்ந்து என்னை காதலிக்க கூறி வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்தார்.

அதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்துள்ளார். தற்போது இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்து கைதும் செய்துள்ளனர் போலிஸார்.

சற்று தான் நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். அதற்கு இப்படியான பிரச்சனையா என்று ரசிகர்கள் ஆதங்கத்தை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.