சென்சார் போர்ட்டையே அதிரவைத்து முகம் சுளிக்க வைத்த காட்சிகள்!! இந்த லிஸ்ட்லயும் கமல் தான் பர்ஸ்ட்..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் சென்சாருக்கு சென்று பல படங்கள் யு மற்றும் ஏ சான்றிதழை பெற்று வரும். அதிலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த காட்சிகளுக்கு யு/ஏ சான்றிதழ் அல்லது ஏ சான்றுதழ் கொடுப்பார்கள். அப்படி சென்சார் போட்டையே அதிரவைத்து முகம்சுளிக்க வைத்த முக்கிய படங்களை பார்ப்போம்.
சிகப்பு ரோஜாக்கள்
இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பதே கமல் ஹாசன் தான். கமல் படம் என்றாலே முத்த காட்சி கிளாமர் ஆட்டம் என குறைவைக்காமல் இருக்கும். அப்படி பாரதிராஜா இயக்கத்தி சைக்கோ திரில்லர் படமாக உருவாகிய படம் சிகப்பு ரோஜாக்கள். ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த இப்படத்தில் முத்தக்காட்சிகள், காதல் நெருக்கமான காட்சிகள் என்று முகம் சுளிக்க வைத்து யு/ஏ சான்றிதழை சிக்குநூறாக்கியது.
உயிர்
இயக்குனர் சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டவர்கள் நடித்த உயிர் படம் 2006ல் வெளியாகியது. அப்படத்தின் பாடல் காட்சிகள் கேட்பதற்கும், பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் படியாக அமைத்திருப்பார்கள். இப்படத்தால் தான் ஸ்ரீகாந்த், சங்கீதாவின் கேரியரை முடித்து வெச்சதாக அமைந்தது.
சிந்து சமவெளி
தமிழ் அறிமுகமாகிய முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர் தான் அமலா பால். சிந்து சமவெளி என்ற படம் மாமனார் மருமகள் கள்ளத்தொடர்பு படம் பெரிய சர்ச்சையில் சிக்கியதோடு பார்ப்பவர்களை முகம் சுளிக்கவும் வைத்தது. இதன்பின் அமலா பாலுக்கு மார்க்கெட்டை நாசமாக்கியதும் சிந்து சமவெளி படம் தான்.
மிருகம்
நடிகர் ஆதி, பத்மபிரியா நடித்து வெளியான படம் மிருகம், இயக்குனர் சாமி இப்படத்திலும் படுமோசமான காட்சிகளை வைத்து முகம் சுளிக்க வைத்தார். இந்த காட்சிகள் இருப்பதை நினைத்து நடிகை பத்மபிரியா விலகவும் நினைத்தார். ஆனால் அவரை அடித்து மிரட்டி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.
இருட்டு அறையில் முரட்டு குத்து
2K கிட்ஸ்களின் அடல்ட் படமாக அச்சாணி போட்ட படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படம். கெளதம் கார்த்திக், யாஷிகா, வைபவி நடிப்பில் உருவாகிய இப்படம் பேய் படமாக ஆரம்பித்து முழுக்க ஆபாச காட்சிகளே அமைந்து முகம் சுளிக்க வைத்தது. இதன்பின் தான் அடல்ட் படங்கள் அதிகரிக்கத்துவங்கியது.