விஜய்யின் பகவதி படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
பகவதி படம்
கடந்த 2002ம் ஆண்டு விஜய் நாயகனாக நடிக்க தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் பகவதி.
விஜய்யுடன் இந்த படத்தில் ரீமா சென், வடிவேலு, ஆஷிஷ் வித்யார்தி, பிஸ்வநாத், யுகேந்திரன், ஜெயம் என பலர் நடிக்க தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் கடந்த 2005ம் ஆண்டு Kashi From Village என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
படத்தின் கதையை தாண்டி வடிவேலு-விஜய் காம்பினேஷன் சீன்ஸ் மிகவும் ஹைலைட்டாக இருக்கும்.
முதல் சாய்ஸ்
இந்த படத்தை இயக்கிய ஏ.வெங்கமேஷ் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். விஜய்யை மனதில் வைத்து பகவதி கதையை இயக்கிய போது அவரின் தம்பி கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்கலாம் என்று யோசித்ததாக கூறினார்.

இதுகுறித்து முதலில் தனுஷிடம் கேட்டபோது, எனக்கு அது சரியாக இருக்காது என கூறினாராம்.
வெங்கடேஷ் இந்த படத்தில் விஜய்யுடன் நடித்தார் B, C சென்டர்களில் ரீச் ஆகும் என கூற தனுஷ் அதற்கு காதல் கொண்டேன் ரிலீஸ் ஆனால் நான் அப்படியே அந்த சென்டர்களுக்கு போய்விடுவேன் என கூறியுள்ளாராம்.
அந்த வயதிலேயே ஹீரோவாக தான் பயணிக்க வேண்டும் என தெளிவு தனுஷிடம் இருந்ததாக ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
