ஓ சொல்றியா மாமா பாடல்.. முதலில் நடனமாட இருந்தது இந்த நடிகையா?
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் புஷ்பா. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு, பிரபல முன்னணி கதாநாயகி சமந்தா, நடனம் ஆடி இருந்தார்.
இப்படத்தில் சமந்தாவின் நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிரபல நடிகை ஸ்ரீலீலா குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடினார்.
இந்த நடிகையா?
இந்நிலையில், ஊ சொல்ரியா பாடல் குறித்த ஆச்சரியமான தகவலை தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, ஊ சொல்ரியா பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு முன்பு, நடிகை கெட்டிகா ஷர்மாவை அணுகியதாகவும், இருப்பினும் சில காரணங்களால் அவரால் நடனமாட முடியாமல் போனதாகவும் அந்த வாய்ப்பு தான் சமந்தாவுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.