பென்சிலை திருடிட்டான், கேஸ் போடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஒன்றாம் வகுப்பு சிறுவர்கள்! வைரல் வீடியோ

education
By Yathrika Nov 27, 2021 11:34 AM GMT
Report

இந்த காலத்தில் குழந்தைகள் கூட ரொம்ப தெளிவா இருக்காங்க என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

ஆனால் அதை நிஜத்திலேயே நிரூபிக்கும் வகையில் ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் சென்று பென்சில் திருட்டு பற்றி புகார் கூறி இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

என்னுடைய பென்சிலை எடுத்து கொண்டு தரமாட்டேன் என்கிறான் என போலீசிடம் கூறும் சிறுவனிடம், அதற்கு என்ன செய்யலாம் என கேட்கிறார் போலீஸ். அதற்கு அவன் மீது கேஸ் போடுங்க என கேட்டிருக்கிறான் அந்த சிறுவன்.

அந்த சிறுவன் உடன் மேலும் சில நண்பர்களும் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்கள். பென்சில் திருடியவனை சிறைக்கு அனுப்ப வேண்டும், ஜாமீன் பிரச்னையாக இருக்கும் என அந்த சிறுவன் கூறி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதை ஆந்திர போலீஸ் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கின்றனர். பள்ளி குழந்தைகள் கூட ஆந்திர போலீசை நம்புகின்றனர் என அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.