விஜய்யின் ரீல் அப்பா இளம் பெண்ணுடன் 2ஆம் திருமணம்!.. முதல் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்தவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் விஜய் நடிப்பில் வெளியான கிள்ளி படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இவர் தில், பாபா, ஏழுமலை, தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.
ஆஷிஷ் வித்யார்த்தி பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 23 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.
தற்போது ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி "Do not get PUZZLED in the puzzle called LIFE" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.