2025-ன் உலக பணக்காரர் லிஸ்ட்!! டாப் 10 இடத்தை கூட பிடிக்காத முகேஷ் அம்பானி, அதானி..

Elon Musk Mukesh Dhirubhai Ambani Gautam Adani World Mark Zuckerberg
By Edward Apr 03, 2025 06:30 AM GMT
Report

2025 World’s Billionaires List

உலகளவில் பணக்காரர்கள் லிஸ்ட்டில் யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார் என்று பிரபல போர்ப்ஸ் இதழ் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2025ல் டாப் 10 இடத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் லிஸ்ட் இடம்பெறவில்லை. எப்போது டாப் இடத்தில் இருக்கும் அம்பானி, முகேஷ் அம்பானி எந்த இடத்தினை பிடித்துள்ளார்கள் என்றும் உலகளவில் டாப் கோடீஸ்வரர்களின் லிஸ்ட்டையும் இங்கு பார்க்கலாம்.

2025-ன் உலக பணக்காரர் லிஸ்ட்!! டாப் 10 இடத்தை கூட பிடிக்காத முகேஷ் அம்பானி, அதானி.. | Forbes World S Billionaires List 2025 Ambani Adani

டாப் 10

  1. எலான் மஸ்க் - $342 பில்லியன்
  2. மார்க் ஸக்கர்பெர்க் - $216 பில்லியன்
  3. ஜெஃப் பெசோஸ் - $215 பில்லியன்
  4. லாரி எலிசன் - $192 பில்லியன்
  5. பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பம் - $178 பில்லியன்
  6. வாரன் பஃபெட் - $154 பில்லியன்
  7. லாரி பேஜ் - $144 பில்லியன்
  8. செர்கே பிரின் - $138 பில்லியன்
  9. அமான்சியோ ஓர்டெகா - $124 பில்லியன்
  10. ஸ்டீவ் பால்மர் - $118 பில்லியன்.

முகேஷ் அம்பானி, அதானி

இந்த பட்டியலில், மொத்தம் 3,028 பணக்காரர்கள் இருப்பதாகவும் அதில் 406 பேர் பெண்கள் என்றும் போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இதில் தொடர்ந்து முதல் இடத்தில் எலான் மஸ்க் பிடித்து வருகிறார். அவரின் 342 பில்லியன் அமெரிக்க டாலாரின் மதிப்பு, இந்தியாவின் 2025 - 26 ஆம் ஆண்டின் ஓராண்டு பட்ஜெட்டில் 57 சதவீத பணமாகும்.

2025-ன் உலக பணக்காரர் லிஸ்ட்!! டாப் 10 இடத்தை கூட பிடிக்காத முகேஷ் அம்பானி, அதானி.. | Forbes World S Billionaires List 2025 Ambani Adani

இது ஒரு பக்கம் இருக்க முதல் 10 இடங்களை பிடிக்காத முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 92.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு வைத்து, 18வது இடத்தினை பிடித்துள்ளார்.

இந்திய மதிப்பில் ரூ. 7.68 லட்சம் கோடி. மேலும், 56.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து வைத்துள்ள கெளதம் அதானி 28வது இடத்தில் இருக்கிறார். சாவித்ரி ஜிண்டால் குழுமம் 35.5 பில்லியன் அமெரிக்க டாலருடன் 56வது இடத்தினை பிடித்திருக்கிறார்

Gallery