வாய்ப்பு கிடைத்தும் ஐஸ்கிரீம் விற்கும் விஜய் பட குட்டி நடிகர்!! நடிப்பை தூக்கி ஒதுக்கிய நிலை..
பெரும்பாலும் சினிமாவில் அறிமுகமாகிய சிலர் சில காலம் நடித்து கொண்டிருக்கும் போதே காணாமல் போய்விடுவார்கள். அப்படி கொடிக்கட்டி பறந்த நட்சத்திரங்கள் கூட திடீரென சில காரணங்களால் சினிமாவை ஒதுக்கி விலகிவிடுவார்கள்.
அப்படி குட்டி நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகர் தான் தற்போது ஐஸ் விற்பனை செய்து வருகிறார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல, விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் குட்டிப்பையன் பரத்.
சகலகலா பூம்பூம் என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகிய பரத் படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் நடிப்பை விட்டுவிலகிவிட்டார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சிறு வயதில் நடிக்கும் போது இருந்த ஆர்வம் எம்.பி.ஏ பட்டபடிப்பை படிக்கும் போது சின்ன கேப் வந்தது.
அதன்பின் இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன்பின் ஐஸ் டிரக் மீதான ஈர்ப்பு எனக்கு வந்தது.
சென்னையில் அது இல்லாமல் இருந்ததால் அதை செய்ய ஆசைப்பட்டு ஐஸ் கிரீம் ட்ரக்கை ஆரம்பித்து நண்பர்களுடன் சேர்ந்து இதை செய்து வருகிறேன் என்று பரத் கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை என்று கூறமுடியாது. நான் அந்த முயற்சியை எடுக்கவில்லை. அப்படி எடுத்தாலும் அது சாதாரணமாக கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் பரத்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/2444a78b-9add-4b09-94e6-c7162bd053d8/23-63e39188dc263.webp)