10 வது படிக்கும் போது என்னோட அந்த போட்டோவால்!! மனமுடைந்து பேசிய நடிகை கேப்ரியல்லா..
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் கேப்ரியல்லா. குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரியல்லா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 102 நாட்கள் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து சென்றார். அதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.
ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேப்ரியல்லா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் அம்மாவுடன் இணைந்து கஷ்டமான சம்பவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நடிகைகளின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை போன்று நீங்கள் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கேப்ரியல்லா, ஆமாம், எனக்கு மோசமான கதைன்னு அதை சொல்லலாம். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது, அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை. படிப்பில் தான் கவனமாக இருந்தேன். அப்போது என் புகைப்படத்தை மார்ப் செய்துவிட்டனர்.
அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை. என்னை மாதிரி இருந்தது. எனக்கு அதை பார்க்க ஒருவேளை நானா இருக்குமோன்னு தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது.
அந்த சம்பவம் 10ஆம் வகுப்பு சமயத்தில் அவ்வளவு பாதித்தது. 3 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஸ்கூலீல் எல்லோரும் அப்படி என்னை பார்த்தார்கள். என் அம்மா, அப்பா பிரின்ஸ்ஃபில் இடம் சென்று அவள் இல்லை என்று கூறிவிட்டனர். அந்த சமயத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.