மொட்டை கடிதாசில் போட்டு கவிஞர் வாலியை திட்டிய இளையராஜா தம்பி! இந்த ஆணவம் வேண்டாம்பா!!

vaali ilaiyaraaja gangaamaran
By Edward Mar 28, 2022 04:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் எவ்வளவு புகழ்ப்படுகிறார்களோ அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் அதன் ஒருபடி குறைந்து புகழுக்கு சொந்தமாகிரார்கள் பாடலாசிரியர்கள். கண்ணாதாசன் முதல் தற்போது சிவகார்த்திகேயன் வரை படங்களில் முக்கியம் வகித்து வருகிறார்கள்.

அப்படி ஒரு லிஜெண்ட் பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் வாலி. இவர் எழுதும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. வைரமுத்துவிற்கு ஆஸ்தான பாடலாசிரியராக இளையராஜாவிற்கு இருந்தவர் வாலி. அப்படியொரு முறை வாலி விழா ஒன்றில் இளையராஜா மற்றும் கங்கை அமரனை சந்திக்க நேரிட்டது.

அப்போது தன் பாடல்களை திட்டியும் பாராட்டியும் பல கடிதங்கள் வரும். அதில் அமர்சிங் என்ற பெயரில் பல கடிதஙள் வரும். பெரும்பாலும் என் பாடல் வரிகளின் குறைகளே அதிகமாக சுட்டிக்காட்டித்தான் அந்த கடிதம் இருக்கும் என்று கூறினார்.

உடனே கங்கை அமரன் அந்த அமர்சிங் மொட்டை கடிதாசி என்னால் தான் எழுதி அனுப்பட்டது என்று கூறி அதிர்ச்சி கொடுத்தாராம் கங்கை அமரன். அதிலும் வாழ்வே மாயம் படத்தில் வாலி வரிகளை திட்டி எழுதியதை பற்றியும் பேசியுள்ளனர்.