10 வருட லிவிங் டுகெதர்! சினிமா - கமலை விட்டு விலக இதுதான் காரணம்? உண்மையை கூறிய நடிகை கெளதமி
80, 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கெளதமி. குரு சிஷ்யன் படத்தின் ஆரம்பித்து பாபநாசம் படம் வரை சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார். நடிகையை தாண்டி ஆடை வடிவமைப்பாளராக முக்கிய படங்களில் பணியாற்றியவர். கௌதமி 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. திருமணமாகி ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இந்த தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். சில காலம் மகளுடன் தனிமையில் இருந்த கௌதமி பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அப்போது கூட சினிமாவில் நடிக்காமல் கமல் படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கௌதமி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியது தன்னுடைய மகள் சுப்புலட்சுமி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்
. தனியாக மகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்ற கவலையில் சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தாராம். தற்போது தன்னுடைய மகள் தைரியமாக முடிவெடுக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டதால் இனி தைரியமாக தன் இஷ்டத்திற்கு சினிமாவில் நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளுக்கு நடிப்பதில் ஆர்வமில்லை எனவும், ஒருவேளை வருங்காலத்தில் ஆசை வந்தால் அதற்கு எந்த தடையும் விதிக்க மாட்டேன் எனவும் கௌதமி குறிப்பிட்டுள்ளார்.
கௌதமி நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரிட் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதமி கமலஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்தார். இதையடுத்து கமலுடன் இருந்த தொடர்பை முறித்துக் கொண்டார். அதற்கு காரணமாக தன் மகளின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு தான் பிரிந்தேன் என்று கூறினார்.
தற்போது பாஜக கட்சியில் கொள்கை பரப்பாளாராக வருகிற சட்ட மன்ற தேர்தலில் பணியாற்றி வருகிறார் நடிகர் கமலுக்கு எதிராக இருவரின் கட்சிகள் வேறுபட்டாலும் நண்பர்களாக இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கூறிகிறது.