ப்பா... யார்றா இந்த பொண்ணு? மேக்கப் இல்லாமல் வீடியோவை வெளியிட்ட காயத்ரி! கலாய்க்கும் ரசிகர்கள்..

Gayathrie
By Edward May 22, 2022 04:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தும் போதிய வரவேற்பு பெறாமல் வளர்ந்து வரும் நடிகை லிஸ்ட்டிலேயே இருப்பார்கள். அப்படியொரு இடத்தில் இருப்பவர் தான் நடிகை காயத்ரி.

2012ல் 18 வயசு படத்தில் தமிழ் பேசும் நடிகையாக அறிமுகமாகி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தனம் என்ற கதாபத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் ப்பா,, யார்றா இந்த பொண்ணு என்று கலாய்க்கும் காட்சி மிகப்பெரியளவில் பிரபலமானது.

இப்படத்திற்கு பிறகு ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், போன்ற படங்களில் நடித்து வந்தார். 10 ஆண்டுகளில் வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்து வந்த காயத்ரி தற்போது விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் ஒருசில படங்களில் நடிக்கவும் உள்ளார்.

தற்போது இணையத்தில் மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.