நெஞ்சை பதற வைத்த சம்பவம்! நூலிழையில் உயிர் பிழைத்த பெண்! வீடியோ இதோ
அவசர உலகில் கவனக்குறைவால் எத்தனையோ அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. அலட்சியமும் இதற்கு காரணம் எனலாம். பொது இடங்களில் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஆனால் சிலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதது விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. சாலைகளில், பேருந்துகளில், ரயில் பயணங்களில் விபத்து நிகழ்வதையும், உயிரிழப்புகள் ஏற்படுவதையும் தினமும் செய்திகளில் பார்த்து வருகிறோம்.
மரணம் வரை சென்று தப்பி பிழைத்தவர்களும் இருக்கிறார்கள். மகாராஷ்டிரா ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கிழே விழ, உடனே ரயில்வே பாதுகாப்பு போலிஸ் அப்பெண்ணை மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூலிழையில் அப்பெண் உயிர் தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.
#WATCH | Two Railway Protection Force (RPF) personnel and a civilian rescue a woman at the Thane Railway Station, Maharashtra, from being swept under an oncoming train at a platform (9.1.2021) #IndianRailways #Maharashtra #RPF #Rescue #Railways pic.twitter.com/TBHDDr7Ana
— First India (@thefirstindia) January 10, 2021