உலக நாயகன்' பட்டம் வேண்டாம்னு சொன்னாரே!! கமல் ஹாசனை கலாய்த்த ப்ளூ சட்டை..

Kamal Haasan Rajinikanth Anirudh Ravichander Viral Video Nelson Dilipkumar
By Edward Feb 21, 2026 08:30 AM GMT
Report

KH x RK Reunion

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் தான் ரஜினிகாந்த் - கமல் ஹாசன். 47 வருடங்களுக்கு முன் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.

அதன்பின் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில், ரஜினி - கமல் காம்போவில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளது.

உலக நாயகன்

அனிருத் இசையில் அப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் KH x RK Reunion படத்தின் கிளிப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

உலக நாயகன்

அந்த வீடியோவில் கமல் ஹாசன் பெயருக்கு முன் உலக நாயகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வைத்து பலரும் தன்னை உலக நாயகன் என்று கூப்பிடவேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டாரே, இப்போது இப்படி போட்டிருக்காரே என்ற கேள்விகளை இணையத்தில் பலரும் கேட்டு வருகிறார்கள்.

உலக நாயகன்

அதில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இனி எனக்கு 'உலக நாயகன்' பட்டம் வேண்டாம். அதை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்றார் கமல். இன்று ரஜினியுடன் அவர் நடிக்கும் பட ப்ரமோ வந்துள்ளது என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.

GalleryGallery