அஜித்தின் குட் பேட் அக்லி படம் நஷ்டமா? பிரபலம் கூறிய தகவல்

Ajith Kumar Good Bad Ugly
By Kathick May 11, 2025 03:30 AM GMT
Report

ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அஜித்தின் குட் பேட் அக்லி படம் நஷ்டமா? பிரபலம் கூறிய தகவல் | Good Bad Ugly Movie Loss Or Profit

இதில் குட் பேட் அக்லி திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ள அவர், இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என இண்டஸ்ட்ரியில் பேசி கொள்கிறார்கள்.

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தயாரிப்பு நிறுவனம் கூறினால் தான் நமக்கு தெரியும். அந்த புள்ளி விவரம் எல்லாம் நம்மிடம் இல்லை என அவர் கூறியுள்ளார்.