அஜித், விஜய் மோதல்.. தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு

Ajith Kumar Vijay Good Bad Ugly
By Kathick Feb 11, 2025 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருடைய படங்களும் தனித்தனியாக வந்தாலே திருவிழா போல் தான் இருக்கும்.

ஒன்றாக ரிலீஸானால் சொல்லவே தேவையில்லை, சரவெடி தான். வாரிசு - துணிவு படங்கள் ஒன்றாக வெளிவந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் - அஜித் படங்கள் வெளிவரவுள்ளது.

அஜித், விஜய் மோதல்.. தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு | Good Bad Ugly Sachin Re Release Clash In Summer

அஜித்தின் குட் பேட் அக்லி கோடையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்திற்கு போட்டியாக கோடையில் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் 'கோடையில் கொண்டாட்டம், சச்சின் ரீ ரிலீஸ்' என அவர் பதிவிட்டுள்ளார். ஆனால் இரு திரைப்படங்களும் கோடையில் எந்த தேதியில் வெளிவரப்போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.