என் உயிரை கொல்லும் தேன்சுடரே!! காதலியை அறிமுகப்படுத்திய குட் நைட் பட நடிகர் மணிகண்டன்..
சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்து தற்போது வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து வருகிறார் மணிகண்டன். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திலும், குட் நைட் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் மணிகண்டன்.
சமீபத்தில் குட் நைட் படத்தின் கதாநாயகி மீதா ரகுநாத்திற்கு நிச்சயம் முடிந்த நிலையில் மணிகண்டன் தற்போது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திவ்யா என்ற பெயரை குறிப்பிட்டு என்னை காதலிப்பது உண்மையா என்று மணிகண்டன் கேட்க அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதில் என்ன ட்விஸ்ட் என்றால், அவர் உண்மையான காதலி கிடையாதாம். திவ்யா என்பவர் மணிகண்டன் அடுத்து நடிக்கும் படத்தின் கதாநாயகி தானாம். இதை கண்டு நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே ராஜா ராணி படத்தின் போது அப்படத்தின் இயக்குனர் அட்லீயும் ஆர்யாவுக்கும் நயன் தாராவுக்கும் திருமணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல் லவ்வர் படத்தினை இயக்கும் இயக்குனர் பிரபுராம், டீசர் விரைவில் என்று கூறிய நிலையில் மணிகண்டன் இந்த வீடியோவை டிரெண்ட் செய்ய இப்படி செய்திருக்கிறார்.
என் உயிரை கொல்லும் தேன்சுடரே @gouripriyareddy ❤️?
— Manikandan Kabali (@Manikabali87) December 23, 2023
Meet My #Lover Dhivya ? pic.twitter.com/8GCTltvfHO