மாதம் ரூ. 6.67 கோடி சம்பளம்!! 8000 கோடியை கோட்டைவிட்ட கூகுள் CEO..
கூகுள் CEO சுந்தர் பிச்சை
தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் சீஈஓ-வாக பணியாற்றி வருபவர் தான் சுந்தர் பிச்சை. 2004ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை, 2015ல் கூகுள் CEO-வாக பொறுப்பேற்றார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் CEO-வாகவும் இருக்கிறார்.
அங்கு வேலை செய்யும் சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரியாக இருந்து மட்டுமே வேலை பார்க்கிறார். அப்படி வேலை பார்க்கும் ஊழியரின் சொத்து மதிப்பு பில்லியன் அளவிற்கு சென்றுள்ளதை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சொத்து மதிப்பு
ஏஐ-யை உருவாக்கும் பணியில் இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு தற்போது 9,142 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. 10 இலக்க சொத்து மதிப்பை கொண்டுள்ளவர்களின் பட்டியலில் சுந்தர் பிச்சை தற்போது இணைந்துள்ளார்.
வெறும் ஆல்பாபெட் பங்குகளை மட்டுமே வைத்துள்ள சுந்தர் பிச்சை 10 வருடங்களில் 650 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார் சுந்தர் பிச்சை. அவரது பங்குகள் இப்போது 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 8 அயிரம் கோடி இருக்கும். இதனால் பல இத்தனை ஆயிரம் கோடியை கோட்டையை விட்டுள்ளார் சுந்தர் பிச்சை