இந்த வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியல? மனைவி பாக்யாவுடன் படுக்க பயப்படும் கோபி!
பிரபல தொலைக்காட்சி சீரியலில் மக்கள் மனதில் அதிக கவனத்தை பெற்றும் வருவது பாக்யலட்சுமி சீரியல் தான். இல்லத்தரசிகளின் இன்னல்களை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில், தன் மனைவி பாக்யாவிற்கு துரோகம் செய்து காதலித்து கல்யாணம் செய்த காதலியுடன் திருட்டுத்தனமாக தொடர்பு வைத்து வருகிறார்.
இந்த விசயம் வீட்டு வேலையும் பெண், கோபியின் தந்தை மற்றும் மகன் கண்டு பிடித்துவிட்டனர். அப்பாவி முகத்துடன் இருக்கும் பாக்யா யார் என்ன சொன்னாலும் தன் கணவர் புராணம் பாடி தான் கதை சென்று வருகிறது.
இந்நிலையில் கோபி தனி ரூமில் காதலி ராதிகாவுடன் போனில் பேசி வந்ததற்கு ஒரு ஆப்பினை வைத்துள்ளார் கோபியின் தந்தை. இனியா எனக்கு தனி ரூம் வேண்டும் அம்மா பாக்யாவை வேறு எங்கயாவது படுக்க சொல்லி கேட்கிறார்.
குடும்பமாக முடிவெடுக்க கோபியின் அப்பா உன் ரூமில் படுக்க வைத்துக்கொள்ள திட்டம் போட்டு அதை நடத்தியும் காட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று புலம்பி முழித்து வரும் கோபியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.