மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்ல.. ராதிகாவை கல்யாணம் செய்து படாதபடும் கோபி..

Serials Baakiyalakshmi
By Edward Oct 22, 2022 11:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு கிடைத்த நேரத்தில் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி.

மகா சங்கமம்

திருமணத்தை முடித்த கையோடி ஊட்டி ஹனிமூனிற்கும் ராதிகாவை கூட்டிச் சென்றுள்ளார். கடந்த வாரம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி மகா சங்கமம் ஆரம்பிக்கப்பட்டு கோபியின் சுயரூபத்தை மூர்த்தி உள்ளிட்டவர்கள் அறிந்து கடுமையாக அசிங்கப்படுத்தியிருந்தார்கள்.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் ராதிகாவும் கோபி மீது கோபப்படுகிறார். இது பக்கம் முடிந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் ராதிகாவை விட்டுவிட்டு பாக்யாவை மேடையில் கூப்பிட்டு கெளரம் செய்ததையும் ராதிகாவால் தாங்க முடியவில்லை. இதனால் ரூமிற்கு வந்ததும் கோபியிடம் வாக்குவாதம் செய்ய, கோபத்தில் எல்லைமீறி ராதிகாவிடம் கை நீட்டியுள்ளார்.

மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்ல.. ராதிகாவை கல்யாணம் செய்து படாதபடும் கோபி.. | Gopi Insult Radhika For Tea Baakiyalakshmi

புது மாப்ள.. மரியாத கூடுதோ

இப்படியொரு நிலையில் ஊட்டியில் இருந்து மீண்டும் வீட்டிற்கு ராதிகாவுடன் இருக்கிறார் கோபி. அப்போது ராதிகாவின் அம்மா, கோபி காபி கேட்டதை அறியாமல் டீ போட்டு கொடுத்துள்ளார். டீயை வாயில் வைத்ததும் முகம்சுளித்த கோபி புலம்பி தள்ளியுள்ளார்.

இதுவே பாக்யா கேட்டால் காஃபியை சூப்பராக போட்டுக்கொடுத்திருப்பார் என்று நினைத்து பார்த்தும் மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்லை என்றும் கவலைப்படுகிறார் கோபி.